பிரித்தானியாவில் மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளது.
அமெரிக்க நிறுவனமான மொடர்னா உருவாக்கியுள்ள கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள், நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
லானெல்லியில் உள்ள மேலதிக கல்வியியல் கல்லூரியில் பணிபுரியும் மிஸ் டெய்லர், கார்மார்த்தனில் உள்ள வெஸ்ட் வேல்ஸ் பொது மருத்துவமனையில் பணியாளர் செவிலியர் லாரா பிரெஞ்சிடமிருந்து முதல் தடுப்பூசியை பெற்றார்.
இதன்மூலம் பிரித்தானியாவில் மொடர்னா கொவிட்-19 தடுப்பூசியை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.
மொத்தம் 5,000 தடுப்பூசி அளவுகள் கார்மார்த்தன்ஷைர், செரிடிஜியன் மற்றும் பெம்பிரோக்ஷைர் முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 17 மில்லியன் மொடர்னா டோஸை பிரித்தானியா வாங்கியுள்ளது. இது 8.5 மில்லியன் மக்களுக்கு போதுமானது.
பிரித்தானியாவில் ஏற்கெனவே ஃபைஸர்-பயோன்டெக் மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.