நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் அரசு திணைக்களங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்த வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 20 பில்லியன் லாபம் ஈட்டிய இலங்கை மின்சார சபை தற்போது 280 மில்லியன் இழப்பை சந்தித்து வருவதாக கூறினார்.
இலங்கை மத்திய வங்கி, உள்நாட்டு வருவாய் துறை, இலங்கை சுங்கம், விமான நிலையம் மற்றும் மின்சார சபை ஆகியன அரசாங்கத்தின் மாற்றத்திற்குப் பின்னர் அபிவிருத்தி அடையவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் குறித்த திணைக்களங்கள் அனைத்தும் கடன் மூலமே இயங்குவதாகவும் இது எதிர்மறையான அறிகுறி இல்லை என்றும் பாட்டாளி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.