பிரித்தானியர்கள் தற்போது கோடை கால விடுமுறையை வெளிநாடுகளில் செலவிடுவதைப் பற்றிச் சிந்திக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிற்கு சர்வதேச பயணம் எவ்வாறு மீண்டும் அனுமதிக்கப்படும் என்பது குறித்த கூடுதல் விபரங்களை அரசாங்கம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது.
இந்தநிலையில், பிரித்தானியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கோடை கால விடுமுறை குறித்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நீங்கள் உங்கள் கோடை விடுமுறையை வெளிநாடுகளில் செலவழிக்க டிக்கெட்டுகளை ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று கூறமாட்டேன். நீங்கள் உங்கள் விடுமுறையை வெளிநாடுகளில் செலவழிப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம்.
எனினும் மக்களுக்கு கொரோனாவின் ஆபத்து குறித்து தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் இதில் எச்சரிக்கையாக இருப்போம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா பரவுவதை நாங்கள் விரும்பவில்லை’ என கூறினார்.
‘போக்குவரத்து சமிஞ்சை விளக்கு’ திட்டத்தின் கீழ், நாடுகள் ஆபத்து அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு பயணிகளை வரவேற்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
மே மாதத்தில் பயணிகளை உள்வாங்க திட்டமிட்டுள்ள பிரித்தானியா, இதுகுறித்த முழுமையான விபரங்களை வெகு விரைவில் வெளியிடும்.