அரசாங்கத்தின் குறுகிய பார்வை கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக பொதுமக்கள் பாதிப்படைவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், அரசாங்கத்தின் முடிவுகள் வர்த்தமானி அறிவிப்புகளுக்கு மட்டுமே என்றும் குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் சந்தர்ப்பவாத அரசியலைப் பின்பற்றுகிறது என்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்க தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பண பரிவர்த்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக பொருட்களின் விலைகள் உயர்வதாகவும் இதன் காரணமாக மக்கள் கடும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகட்டுவம் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் குறிப்பிட்டார்.
வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றதே அன்றி பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில் அவை செயற்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.