மறைந்த இளவரசர் பிலிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில், அமெரிக்க மக்கள் சார்பில் தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.
இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘தனது 99 ஆண்டு கால வாழ்வில், உலகத்தில் ஏற்பட்ட வியத்தகு மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட மாற்றங்களை கண்டவர்.
2ஆம் உலக போரில் பணியாற்றி, 73 ஆண்டுகள் ராணியுடன் உற்ற துணையாக இருந்து, தனது முழு வாழ்வையும் பொது வாழ்க்கையின் மீது கண்ணாக இருந்து, இங்கிலாந்து மக்கள், காமன்வெல்த் மற்றும் அவரது குடும்பத்திற்காக மகிழ்ச்சியுடன் தன்னை அர்ப்பணித்தவர்.
இந்த தருணத்தில், பிரித்தானிய இளவரசி மற்றும் இளவரசர் பிலிப்பின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்டோரை ஜில் மற்றும் நான் எங்களுடைய மனத்தில் இருத்தி வைத்துள்ளோம்’
இளவரசர் பிலிப் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தனது 99 வயதில் விண்ட்சர் கோட்டையில் காலமானார்.