மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடந்த குழப்பத்தின்போது மத்திய துணை இராணுவ வீரர்களே வாக்காளர்களைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளைய தினம், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்காளர்களை மத்திய துணை இராணுவ வீரர்கள் சுடவில்லை என மத்திய குறித்த படையின் தலைமை மறுப்புத் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் தமது படைவீரர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை என படைத் தலைமை குறிப்பிட்டுள்ளது.