கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய நோர்வே பிரதமர் எர்னா சோல்ப்பர்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி பிறந்த நாள் கொண்டாடியதற்காகவே பிரதமர் எர்னா எர்னா சோல்ப்பர்க்கு 2,532 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளில் ஒன்றாக, பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்தத் தடையை மீறி ஹோட்டல் ஒன்றில் பிரதமர் எர்னா 13பேருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால், இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த பிரதமரின் கணவர் மற்றும் ஹாட்டல் நிர்வாகி ஆகியோருக்கு அபராதம் விதிக்காமல் பிரதமருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பிரதமரே விதிமுறைகளை மீறியுள்ளதால் அவருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.