பிரான்ஸின் பிரபல ரயில் தயாரிப்பு நிறுவனமான அல்ஸ்டோம் நிறுவனம், டென்மார்க் நாட்டிற்கான புதிய ரயில்களை தயாரிக்கவுள்ளது.
டென்மார்க்கில் இடம்பெற்ற ஏலத்தில் பங்கெடுத்து, புதிய ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பிரான்ஸின் அல்ஸ்டோம் நிறுவனம், கைப்பற்றியுள்ளது.
இதன்படி, டென்மார்க் நாட்டுக்காக 100 மின்சார ரயில்களை தயாரிக்க உள்ளது. இதற்காக 269 மில்லியன் யூரோக்கள் பெறுமதி கொண்ட ஒப்பந்தத்தில் அல்ஸ்டோம் நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது. 2024-2 029ஆம் ஆண்டுக்குள் இந்த ரயில்கள் வழங்கப்பட வேண்டும்.
டென்மார்க் மெல்ல மெல்ல டீசல் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தி வரும் நிலையில், இந்த மின்சார ரயில் பெரும் புரட்சியை ஏறபடுத்தும் என அந்நாட்டு போக்குவரத்து நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.