48 வயதான பெண்ணின் மரணதிற்கு தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்பதனால் கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து ஆய்வு செய்யும் என அவுஸ்ரேலியா சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்தார்.
நாட்டில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட குறித்த பெண் உட்பட மூவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.,
இந்நிலையில் தடுப்பூசிகள் அனைத்தையும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயற்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு செய்வதை அரசாங்கம் உறுதிசெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை மேலும் கட்டுப்படுத்த உடனடியாக எந்த நிடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சர், 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நெருங்கி வருவதால், வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கலாமா என்பது குறித்த முடிவு அடுத்த வாரத்தில் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஹன்ட் கூறினார்.