மேற்கு வங்க மாநிலத்திலுள்ள 45 சட்டமன்றத் தொகுதிகளிலும் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அம்மாநிலத்திலுள்ள மக்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் ஆர்வமாக வாக்களித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தேர்தலில் 342 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 1 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில், சட்டமன்றத் தேர்தலை 8 கட்டங்களாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.