பாகிஸ்தானில் பிரான்சுக்கெதிரான வன்முறை வலுப்பெற்றுள்ளதால், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த அனைவரும் தற்காலிகமாக வெளியேறுமாறு பிரான்ஸ் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
பிரான்ஸின் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பிரான்ஸ் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சூழலில் பாகிஸ்தானுக்கான பிரான்ஸ் நாட்டு தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்திருக்கின்றன. பிரான்ஸ் நலனை அச்சுறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பிரான்ஸ் குடிமக்கள் அனைவரும் கிடைக்கும் விமானச் சேவையைப் பயன்படுத்தி தற்காலிகமாக பாகிஸ்தானை விட்டு வெளியேறிவிட அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது நபியின் கேலி சித்திரங்களை வெளியிட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளான சார்லி ஹெப்டூ இதழ்க்கு எதிராகவும், ஆதவராக பேசிய ஜனாதிபதி மக்ரோங்க்கு எதிராகவும் பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த எதிர்ப்பு, தற்போது பாகிஸ்தானில் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரான்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.