2021ஆம் ஆண்டின் முதல் காலண்டில் சீன பொருளாதாரம் 18.3 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளதாக சீனாவின் தேசிய புள்ளிவிபரப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டுக்கான தொழில் துறை உற்பத்தி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 14.1 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. சில்லறை விற்பனை 34.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
கடந்த 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சீன பொருளதாரம் 6.8 சதவீதம் வீழ்ச்சி கண்டது.
1992ஆம் ஆண்டு முதல் காலாண்டு வாரியாக ஜிடிபி தரவுகளைப் பராமரிக்கத் தொடங்கியதிலிருந்து பதிவான மிகப் பெரிய காலாண்டு வளர்ச்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.