மறைந்த எடின்பரோவின் கோமகனும் பிரித்தானிய இளவரசருமான ஃபிலிப்பின் இறுதிச் நிகழ்வு வின்சர் கோட்டையில் விசேட ஆராதனைகளுடன் நடைபெற்றுள்ளது.
புனித ஜோர்ஜ் தேவாலயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவரது பூதவுடல், பிரார்த்தனை நிகழ்வு முடிவடைந்த நிலையில் வின்சர் கோட்டை உள்ளரங்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு ஆரம்பம்!
மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் மகாராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
99 வயதில் காலமான இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.
இறுதிச் சடங்குகள் அனைத்தும் கோட்டையின் மைதானத்திற்குள் நடைபெறும் நிலையில், இறுதிச் சடங்கில் மிக முக்கியமான 30பேர் மாத்திரமே கலந்துகொண்டுள்ளனர்.
குறிப்பாக, இளவரசர் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட் மற்றும் இளவரசி அன்னே மற்றும் பேரன்கள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் இளவரசர் ஃபிலிப்பின் உடல் ஏற்றிச் செல்லப்படும் லாண்ட் ரோவருடன் நடந்து சென்று அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
இந்த இறுதி நிகழ்வில், 730இற்கும் மேற்பட்ட படை வீரர்கள் பங்கேற்று ஃபிலிப்புக்கு மரியாதை அணிவகுப்பு நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.