வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் 404 பேரின் மாதிரிகள் இன்று (சனிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 10 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களில் யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நால்வரும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.