மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் இருநாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரபு நாடுகளில் பணிப்புரிந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள், மீண்டும் அவர்களது நாட்டுக்கே திரும்பியிருந்தனர். இந்நிலையில் அவர்களை மீண்டும் பணிக்கு அழைப்பது தொடர்பிலும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் சமாதானப் பேச்சுவார்த்தையில் அரபு நாடுகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் அபுதாபி பயணம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.