கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்காளத்தில் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பேரணிகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரத்து செய்துள்ளார்.
மேற்குவங்காள சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு, இதுவரை 5ஆம் கட்டத் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
அந்தவகையில் அடுத்தகட்டத் வாக்குப்பதிவு எதிர்வரும் 22, 26 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு, மே 2ஆம் திகதி வாக்கு எண்ணும் நடவடிக்கை நடைபெற இருக்கின்றது.
இந்நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரொனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ஆகவேதான் ராகுல் காந்தி, மேற்கு வங்காளத்தில் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பேரணிகளை இரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது ருவிட்டர் பக்கத்திலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது பேரணிகளை இரத்து செய்கின்றேன்.
தற்போதைய சூழ்நிலையில் பேரணிகளை நடத்துவது தொடர்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து அனைத்து அரசியல் தலைவர்களையும் சிந்திக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.