சீனாவும் இலங்கையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.
இந்த முன்மொழிவு, கடந்த 2015க்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கடைசி பாதியில் விவாதிக்கப்பட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.
இந்நிலையில் குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் இலங்கை ஏற்றுமதியை, சீன சந்தைக்கு அனுப்புவதாகுமென நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆண்டுதோறும் சுமார் 3700 மில்லியன் டொலர் மதிப்புள்ள பல்வேறு தயாரிப்புகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.
அதேபோன்று இலங்கையும் ஆண்டுதோறும் 700 மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.