இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 75 ஆயிரத்து 306 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 50 இலட்சத்து 57 ஆயிரத்து 767 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 29 இலட்சத்து 48 ஆயிரத்து 848 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 19 இலட்சத்து 30 ஆயிரத்து 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.
அதேநேரம் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 625 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 793 ஆக அதிகரித்துள்ளது.