இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 357 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 796ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 93 ஆயிரத்து 113 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 65 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 411 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலுமொரு உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பிட்டபத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.