புதிய கொவிட் மாறுபாட்டின் அச்சத்தினால், பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.எஸ்.டி 04:00 முதல் இந்தியாவில் இருந்து பயணம் செய்யும் மக்களின் வருகை மறுக்கப்படும்.
பிரித்தானிய அல்லது அயர்லாந்து கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அல்லது பிரித்தானிய குடியிருப்பு உரிமை உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
பி .1.617 என அழைக்கப்படும் இந்தியாவின் புதிய கொவிட் மாறுப்பாட்டினால், இதுவரை 103பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் கூறினார். இவை சர்வதேச பயணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.