குருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று(புதன்கிழமை) 578 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதில் குருநாகல் மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 171 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், புத்தளத்தில் 51 கொரோனா தொற்றாளர்களும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து தலா 43 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 50 ஆக காணப்படுகின்றது.
இவர்களில் 93 ஆயிரத்து 668 பேர் சிகிச்சைகளின் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 752 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.