சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கயைிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வலுவான காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.