கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்தியாவுக்கு எவ்வாறான உதவிகளை வழங்குவது சிறந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2ஆம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில நாட்களாக ஒருநாள் தொற்று 3 இலட்சத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
மேலும் வைத்தியசாலையில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் ஒட்சிசன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒட்சிசன் விநியோகத்தை விரைவுப்படுத்த மத்திய அரசும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.