ஈராக் தலைநகர் பக்தாத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளதுடன் 100 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை நிலையமான குறித்த வைத்தியசாலையில் காணப்பட்ட ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்தே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் மருத்துவமனையில் ஒக்சிஜன் தொட்டி வெடித்ததில் 23 பேர் உயிரிழப்பு- மேலும் பலர் படுகாயம்!
ஈராக் தலைநகர் பக்தாத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக் தலைநகரின் தியாலா பிரிட்ஜ் பகுதியில் உள்ள இப்னுல் காதிப் மருத்துவமனையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் விபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை நிலையமான குறித்த வைத்தியசாலையில் காணப்பட்ட ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தீ விபத்து தொடர்பாக ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி, தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன் அலட்சியமாகச் செயற்பட்டவர்களை இதற்குப் பொறுப்பேற்க வைப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, குறித்த வைத்தியசாலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதுடன் தீயிலிருந்து தப்பிப்பதற்கான விடுதிகளில் இருந்து வெளியில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டியுள்ளதுடன் சுகாதார அமைச்சரை உடனடியாக நீக்குமாறு ஈராக்கிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.