தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் தென்மாகாண ஆளுநர் விலி கமகேயுடன் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது தற்போது தென்மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையிலேயே தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளது.