அமெரிக்கா தனது அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 60 மில்லியன் டோஸ் வரை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கூட்டாட்சி பாதுகாப்பு மறுஆய்வுக்குப் பிறகு வரும் மாதங்களில் தடுப்பூசி அளவுகளை ஏற்றுமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியை அதன் கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை என்றாலும், அமெரிக்காவிடம் கையிருப்பு உள்ளதாக வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஸையன்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளுக்கு மிகுந்த தேவை உள்ள நிலையில், தடுப்பூசி பதுக்கி வைத்திருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியிருந்ததன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.