வேல்ஸில் உள்ள பப்கள் மற்றும் உணவகங்கள் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளன.
நேற்று (திங்கட்கிழமை) முதல், வேல்ஸில் உள்ள பப்கள், அருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெளியில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
ஆறு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர் வரை இப்போது சந்திக்க முடிகிறது. எனினும், சமூக விலகல் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் உள்ளன.
மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தீம் பூங்காக்கள் போன்ற வெளிப்புற இடங்கள், முடக்கநிலையின் சமீபத்திய தளர்த்தலின் கீழ் மீண்டும் திறக்கப்படலாம்.
திருமண வரவேற்புகள் மற்றும் இறுதிச் சடங்குகள் மீண்டும் 30பேர் வரை ஒழுங்குபடுத்தப்பட்ட வளாகங்களில் வெளியில் நடத்தப்படலாம்.
30 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட விளையாட்டு நடவடிக்கைகள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்புற நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க முடிகிறது.