இந்தியாவின் கொரோனா நிலைவரம் இதயத்தை நொறுக்குகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ இந்தியாவில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மருந்து, மருத்துவ உபகரணங்கள் வேண்டி சமூகவலைதளங்களில் மன்றாடுவதும் வேதனையளிக்கிறது.
உலக சுகாதார அமைப்பு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அவசர கால தேவைக்கான மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பொருட்களை அனுப்பிவைக்கிறது.
இதுவரை ஐ.நாவின் போலியோ, காசநோய் ஒழிப்பு திட்டங்களில் பணியாற்றிவந்த நிபுணர்களை இந்தியாவிற்கு உதவியாக அனுப்பிவைத்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.