இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் கிரிக்கெட்டுக்காக ஆறு அணிகள் தகுதிபெற்றுள்ளன.
எட்டு அணிகள் விளையாட இருக்கும் இந்தப் போட்டித்தொடரில், இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் தென்னாபிரிக்கா ஆகிய ஆறு நாடுகள் தகுதிபெற்றுள்ளன.
மேற்கூறிய ஆறு அணிகளும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி நிலவரப்படி, ஐ.சி.சி மகளிர் ரி-20 ; தரவரிசையின் அடிப்படையில் இந்த அணிகள் தங்களுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
எஞ்சிய இரு இடங்களில் ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து ஒரு அணி தேர்வாக இருக்கிறது. கரீபியன் அணிகளிடையே நடத்தப்படும் தகுதிப் போட்டியிலிருந்து தேர்வாகும் அணி ஏழாவது அணியாக இணையும்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் தகுதிப் போட்டி மூலமாக இறுதி அணி தேர்வு செய்யப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ரி-20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். அதிலும் மகளிர் கிரிக்கெட் நடத்தப்படுவது இது முதல் முறை.
மலேசியாவில் 1998ஆம ஆண்டு; நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் விளையாடப்பட்டது. அதில் தென்னாபிரிக்கா அணி சம்பியன் ஆனது.
பர்மிங்காமில் நடைபெறும் 2022ஆம் ஆண்டு பொதுநலவாய கிரிக்கெட் போட்டிகள் எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும்.