தமிழகத்தில் மே 2ஆம் திகதி திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெரிவித்த அவர், ஜூன் அல்லது ஓகஸ்ட் மாதத்திற்கு வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்கவே இல்லை என குறிப்பிட்டார்.
மே 1 மற்றும் 2ஆம் திகதி ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா 2ஆம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.