பிரெக்ஸிட்க்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜனவரி முதல் தற்காலிகமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் இன்று அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரித்தானியா மீன்பிடி உரிமைகளை தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரான்ஸ் இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி சேவைகளில் பழிவாங்கல்களுடன் பதிலளிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.
வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியாவின் பொருட்களின் வர்த்தகத்தை உள்ளடக்கியது.
இதன் பொருள் பொருட்கள் – ஆனால் சேவைகள் அல்ல – கட்டணங்கள் அல்லது ஒதுக்கீடுகள் இல்லாமல் வர்த்தகம் செய்யலாம். பிரித்தானியாவின் பொருளாதாரம் சேவைகளால் ஆதிக்கம் செலுத்துகிறது.