கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் மேலும் சில இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபால புத்தல – ரத்னகம முதலான கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் உகன – குமாரிகம கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாத்தளை மாவட்டத்தில் நாவுல – அளுகொல்ல கிராமசேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் குறித்த பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.