இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 902 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 79 இலட்சத்து 98 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் ஒரு கோடியே 48 இலட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 29 இலட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
அதேநேரம் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 285 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.