2019 ஜனவரியில் வனாதவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரித்த மற்றும் குறித்த பகுதியை பராமரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத நிதிச் சட்டத்தின் கீழ் இன்று (புதன்கிழமை) புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதேவேளை பயங்கரவதாக தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹசீம் மற்றும் மொஹமட் ஹஸ்தூனுடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி மொஹமட் முஃபீஸ், மொஹமட்ஹமாஸ், இப்ராஹிம் மொஹமட் நௌபர், மொஹமட் சஜித், இப்ராஹிம் சதீக் அப்துல்லா, மற்றும் கஃபூர் மாமா ஆகியோர் தொடர்பாகவே விசாரணை மேற்கொள்ள குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














