கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் நாட்டை முடக்குவதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
பலநாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துவைத்துக்கொண்டு தயாராகயிருப்பது சிறந்தது என தெரிவித்துள்ள இராணுவத்தளபதி, எனினும் எதிர்வரும் நாட்களில் கண்டுபிடிக்கப்படவுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையே இதனை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்தார்.
தாங்கள் மக்களை அச்சுறுத்தவேண்டிய அவசியமோ அல்லது உண்மையை மறைக்கவேண்டிய தேவையோ இல்லையென தெரிவித்துள்ள அவர், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் சிகிச்சை நிலையங்களை அதிகரிக்க இராணுவம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.