பள்ளிவாசல்களுக்கு அவசர கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வக்பு சபை பணிப்புரை விடுத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கேற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுகைக்காக அனுமதிப்படுபவர்களின் எண்ணிக்கை 25 பேராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஐவேளை தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.