உலக அளவில் கொரோனா மரண விகிதம் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மருத்துவ கல்லூரியை நேரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருந்தாலும் ஒவ்வொரு மரணமும் வேதனையானதுதான். கொரோனாவுக்கு எதிரான சிறந்த ஆயுதம் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதுதான்.
முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைக்கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், ஆகியவற்றைவிட மிகப்பெரிய ஆயுதம் இல்லை. இதைத் தான் பிரதமர் மோடி ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார்.
கொரோனாவுக்கு எதிரான போர் நடந்து வருகிறது. கொரோனாவை ஒடுக்க தனது அனைத்து அனுபவங்களையும் மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.