10 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கை கொண்டுவர வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான குறித்த வழிக்காட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் முழு ஊரடங்கை அமுல்படுத்துவதற்கு பதிலாக கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து அதை தீவிரமாக அமுல்படுத்தினால் போதுமானது எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் வேகம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆய்வு செய்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், அலுவலகங்கள், பாடசாலை கல்லூரிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் எனவும் வலியுறத்தியுள்ளது.
புதிதாக கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகளை மே மாதம் 31 ஆம் திகதிவரை அமுல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்தும், நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.