திருமணம் செய்ய அனுமதிமதிக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பலர் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமண நாள் நிச்சியிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த நாட்கள் தவறினால், அடுத்த திருமண நாட்கள் மாத கணக்கில் தள்ளி போகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அதனால் மிக எளிமையாக இரு வீட்டாருடனாவது திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை சிலர் நீண்ட நாட்களாக திருமண நாட்கள் கூடாமல், திருமணம் கை கூடாமல் தோஷங்களால் பாதிக்கப்பட்டு இருந்து தற்போது நாள் குறித்துள்ள நிலையில் குறித்த நாளில் திருமணம் நடத்த முடியாவிட்டால் பின்னர் வருடங்கள் கடந்தும் திருமணம் கைகூடாது என ஜோதிடர்கள் கூறியுள்ளதாகவும், அதனால் மிக எளிமையாக, கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடனாவது திருமணத்தை நடத்த அனுமதிக்குமாறு கோரி வருகின்றனர்.
ஆனால் நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் அனுமதி வழங்க முடியாது என சுகாதார வைத்திய அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.