இலங்கையில் சமையல் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதைத் தடுக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்கவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.
2003ஆம் ஆண்டு ஒன்பதாம் இலக்க நுகர்வோர் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நேற்று ஏழாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சமையலுக்கு உகந்த தேங்காய் எண்ணெய்யை வேறு எந்தவொரு எண்ணெய் வகையுடனும் கலப்படம் செய்யாமல் மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள் உள்ளிட்ட எண்ணெய் விநியோகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.