கம்பஹா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 499 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதாவது கம்பஹா சுகாதார பிரிவவில் 67 பேருக்கும் கட்டானாவில் 66 பேருக்கும் பியகமவில் 61 பேருக்கும் மகரவில் 46 பேருக்கும் கம்பாஹாவில் 32 பேருக்கும் தொம்பேயில் 28 பேருக்கும் மற்றும் மீரிகமவில் 27 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நலின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இவர்களில் 435 பேர் சுகாதார அலுவலகத்தின் கள ஆய்வின் போதும், 64 பேர் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று (திங்கட்கிழமை) காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்ட122 பேர், மாவட்டத்தின் ஆறு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆறு மையங்களிலுள்ள 511 படுக்கைகளில் 386 நிரம்பியுள்ளன. இதேவேளை கடந்த 24 மணி நேரத்திற்குள், கம்பாஹா மாவட்டம் முதலீட்டு மண்டலத்திலுள்ள கட்டுநாயக்க மற்றும் பியகமவிலுள்ள தொழிற்சாலைகளில் வைரஸினால் பாதிக்கப்பட்ட 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் 14,203 பேரை வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.