பிரித்தானியா- சுவீடன் கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ‘ஐரோப்பாவின் எதிர்காலம்’ என்ற மாநாட்டில் இந்த அறிவிப்பினை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பிரான்ஸில் நாங்களும், ஐரோப்பாவும் தொடர்ந்தும் அஸ்ராஸெனக்காவை உபயோகிக்க வேண்டும். மிகவும் சிக்கலான காலத்தில் அஸ்ராஸெனக்கா எங்களிற்குப் பெரிதும் உதவியது.
ஆனால், தற்போதுள்ள புதிய பல மரபணுத்திரிபு வைரஸ்களிற்கான சகத்தியுள்ள வேறு கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. அவற்றை உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்’ என கூறினார்.