கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் என நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக சபை ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் பேசிய அவர், உயர் நீதிமன்றம் பரிந்துரைக்கும் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் மாற்றங்களை மேற்கொள்ளும் என கூறினார்.
போர்ட் சிட்டி குறித்த ஆரம்ப பணிகள் 2013 இல் தொடங்கிய போது, முன்னாள் பிரதமரும் கடந்த அரசாங்கமும் இந்த திட்டத்தை தொடர்ந்தன அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டினார்.
எனவே இந்தத் திட்டம் இலங்கையின் பொருளாதாரத்தின் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதால் எதிர்க்கட்சி தங்களுக்கு ஆதரவளிக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த திட்டம் 80 மில்லியன் டொலர் மேலதிகமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுவரும் என்றும் 100,000 வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.