கொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி திட்டம், தடுப்பூசி விலை உள்ளிட்டவை குறித்து இன்று (திங்டக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போதே மத்திய அரசு மேற்படி குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்த பிரணாம பத்திரத்தையும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
சர்வதேச அளவிலான பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் திட்டங்கள் முற்றிலுமாக மருத்துவ நிபுணர்களாலும், அறிவியல்பூர்வமான கருத்துக்களாலும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு இதன்போது குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த விவகாரத்தில் எதிர்பார்க்காததும், தேவையற்றதுமான பின்விளைவுகள் நோய் கட்டுப்பாட்டில் ஏற்படும் எனவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.