மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11,408 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தின் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 246 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் கண்டி மாவட்டத்தில் 6798 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 2194 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 2416 பேரும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மத்திய மாகாணத்தில் 112 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன, அதேநேரத்தில் கண்டி மாவட்டத்தில் 78 கொவிட் இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 19 கொவிட் இறப்புகளும், நுவரெலியா மாவட்டத்தில் 15 கொவிட் இறப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.