நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் முகக்கவசம் அணிய தவறியமை உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 7,864 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.