திருப்பதி அரச மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவிய நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மேலும் 20 பேர் ஆபத்தான நிலையில், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணா கலநிலைவரங்களை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
இதன்போது பேசிய அவர், சென்னையில் இருந்து வரவேண்டிய ஒக்சிஜன் சிலிண்டர்கள் சற்று காலதாமதமாக வந்ததாலும், நோயாளிகளுக்கு கொடுத்து வந்த ஒக்சிஜன் அழுத்தம் குறைவாக இருந்த காரணத்தினாலும் மேற்படி 11 பேர் உயிரிழக்க நேர்ந்ததாக குறிப்பிட்டார்.