நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை தொடர்பாக ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை அரசாங்கம் உடன் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கோரிக்கையை விடுத்தார்.
கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆராய்ந்தமை காரணமாக அந்த நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசியல் வேறுபாடுகளை களைந்து கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க தமது கட்சி தயார் என்றும் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.