ஸ்கொட்லாந்தில் உள்ள மக்கள் வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பும் போது, தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என புரிந்துக்கொள்ளப்படுகின்றது.
இது இங்கிலாந்தில் உள்ளதைப் போலவே ‘போக்குவரத்து சமிஞ்சை விளக்கு’ அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் இது மே 24ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
நாடுகளை பச்சை, செம் மஞ்சள் மற்றும் சிவப்பு என வகைப்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கும் ஒரு ஆய்வு நடைபெறும்.
நாடுகளின் இந்த வகைப்படுத்தல் கொவிட் தொற்றுகள் மற்றும் தடுப்பூசி வீதங்கள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது.
மே 17ஆம் திகதி முதல் தெற்கே செயற்படும் பச்சை பட்டியலில், போர்த்துக்கல், இஸ்ரேல், சிங்கப்பூர், அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, புருனே, ஐஸ்லாந்து, ஜிப்ரால்டர், பால்க்லேண்ட் தீவுகள், பரோயே தீவுகள், தென் ஜோர்ஜியா மற்றும் சாண்ட்விச் தீவுகள், செயின்ட் ஹெலினா, டிரிஸ்டன் டி குன்ஹா மற்றும் அசென்ஷன் தீவு ஆகியவை அடங்கும்.
பயணிகள் லொக்கேட்டர் படிவம் அவசியம் மற்றும் புறப்படுவதற்கு முன் சோதனை. ஆனால் திரும்பும்போது ஹோட்டல் தனிமைப்படுத்தல் அல்லது சுய தனிமைப்படுத்தல் தேவையில்லை.