மாகாணங்களுக்கு இடையேயான பயண கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த திருத்தப்பட்ட கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி மே 31 வரை திருமண வைபவங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் திருமண பதிவாளர் உட்பட 15 பேருடன் பதிவுத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை உயிரிழப்பவர்களின் உடல்களை வைத்தியசாலையில் இருந்து ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் இறுதி சடங்கில் ஒரே தடவையில் ஆகக்கூடியது 15 பேர் மாத்திரமே பங்குப்பற்ற முடியும் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.